Saturday, July 23, 2011

The law of the seed


Take a look at an apple tree. There might be five hundred apples on the tree, each with ten seeds. That's a lot of seeds!

We might ask, "Why would you need so many seeds to grow just a few more trees?"

Nature has something to teach us here. It's telling us: "Most seeds never grow. So if you really want to make something happen, you better try more than once."

This might mean:

You'll attend twenty interviews to get one job.

You'll interview forty people to find one good employee.

You'll talk to fifty people to sell one house, car, vacuum cleaner, insurance policy, idea...

And you might meet a hundred acquaintances to find one special friend.

When we understand the "Law of the Seed", we don't get so disappointed.

We stop feeling like victims. Laws of nature are not things to take personally.

We just need to understand them - and work with them.

Wednesday, July 13, 2011

இமை மூடிய இணையக்காதல்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ .. நீ விட்டா மூச்சு காற்றை ஏதோ ஒரு ஜீவன் இங்கு சுவாசிக்க .. இன்று உன் சுவாசமே இல்லாமல் போனதை அறியவோ மூன்று வாரங்கள் ஆயிற்று .. நீ விட்ட மூச்சி காற்று இன்று எங்களின் கண்ணீராய் வெளிவருகின்றன ... இதுவரை நான் அறிந்த உன் கதையை ஊர் அறிய இன்று நான் கூறி உன் உயிருக்கான இழப்பை ஈடுகேட்ட முடியாவிட்டாலும் , உன் போல் பல ஏமாளிகள் இவ்வுலகில் உள்ளதால் , அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாய் இருக்கட்டும் ... நீ வாழும் காலத்தில் என்னை எழுத சொல்லி கேட்டுக்கொண்டு என் தோழியின் ஆசை நீ சென்ற பின் தான் நிறைவேறியிருக்கிறது. என்னை மன்னித்துவிடு தோழமையே..

இக்கதை என் தோழியின் தோழமைக்கு சமர்ப்பணம் ..

அவள் கல்லூரியின் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் தன் தாய்க்கு உதவியாய் வேலை பார்த்து கொண்டிருந்தாள் , மதியம் உணவு அருந்திவிட்டு சிறு தூக்கம் போட கண் அசைக்கும் முன் அவளை விழிக்க வைத்தது தபால் காரனின் கதவை தட்டும் சத்தம் .. அவளுக்கு வந்த முதல் கடிதம் , ஆவலுடன் திறந்து பார்த்தாள் .. சென்னை ஒரு IT கம்பெனியில் வேலை வாய்ப்புக்கான உத்தரவு கடிதம் ..தன் தம்பிகளின் படிப்பிற்கும் , தன் குடும்ப வறுமையை சீர் செய்ய அவளுக்கும் வேறு வழியில்ல , அவள் பெற்றோர்களுக்கும் அவளை முழு மனதுடன் வேலைக்கு அனுப்ப மனமில்லாமல் அனுப்பி வைத்தார்கள் . . . தன் வாழ்வில் முதல் முறையாக மதுரையை விட்டு தன் குடும்பத்தை பிரிந்து புறப்படும் சுஜாவுக்கோ (சுஜாதா - பெயர் மாற்றப்பட்டது ) மனசுக்குள் ஆயிரம் சஞ்சலங்கள் . தன் தோழிகள் சென்னையில் வேலை பார்திடிருப்பது அவளுக்கு ஒரு விதமான நம்பிக்கை கொடுத்தாலும் , தனிமையை நினைத்து மிகவும் வருந்தி கொண்டிருந்தாள் .. அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் , ஆயிரம் சிந்தனைகள் மனதில் ஓடிகொண்டிருக்க அவள் சென்னை வந்தடைந்தாள் .. ஒரு பக்கம் 10 மணிநேர வேலை அவளை வாட்டா இன்னொரு பக்கம் அவளுக்கோ தனிமை மிகவும் கொடுமையாக இருந்தது .. தோழிகள் கூடவிருந்தும் அவளால் தனிமையை விட்டு பிரிய மனமில்லாமல் தனிமையை கூடவே வாழ பிரியப்பட்டவளுக்காக வந்தமைன்தது ஒரு இணைய நட்பு - மாதவன் .. ஆரம்பத்தில் பெரும் தயக்கத்துடன் தொடங்கிய நட்பு நாளிடைவில் அவன் நகைப்பும் அன்பான பேச்சும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக அவளின் தனிமையை பிரித்து அவனுடன் இணைய வைத்தது .. இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதில் போட்டியிட்டு கொண்டு காதலிக்க ஆரம்பித்தனர் ... அவர்கள் காதல் மூன்று ஆண்டு வளர்த்து , நான்காமாண்டின் துவக்கத்தில் அவன் அவளை கொஞ்சம் விட்டு விலக ஆரம்பித்தான் .. மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் தனிமையை அவளை வாட்ட தொடங்கின , அவளின் வெகுளிதனமானா கேள்விகளுக்கோ அவன் விடை தர வெகு நாட்கள் மறுத்து கொண்டு வந்தான் .. ஒரு மாதம் இடைவேளை அவளுக்கோ ஒரு யுகம் போல் தோன்றிய நரகமான நேரத்தில் அவளை வானுக்கும் மண்ணுக்கும் குதிக்க வைத்தது அவனின் தொலைபேசி அழைப்பு , அவளை நேரில் காண வேண்டும் என்று சொல்ல அவளின் கண்ணில் நீர் வீழ்ச்சி கொட்டியது ..

அமைதியான அப்பூங்காவின் மௌனத்தை உடைத்த இருவரின் சிரிப்பும் வெகு நேரம் நிலைக்கவில்லை , அவளின் கேள்விகளுக்கு பதில் ஒவ்வொன்றாக வந்தது ... இதுவரை அவளின் கண்ணீர் துடைத்து கொண்டிருந்தவன் , இன்று அவனை பற்றி கூறி அவளின் கண்ணீருக்கே காரணமானான் ... காதலும் கண்ணீரும் இணை பிரியா நண்பர்கள் , என்றும் ஒருவருக்கொரு விட்டுகொடுத்தே வாழ்வார்கள் ... இன்று இவளின் கண்ணீருக்கு காரணம் அவனின் காதல் .. ஆம், பத்து ஆண்டுக்கு முன் அவனின் காதல் கதை தான் அவளின் கண்ணீருக்கான காரணம் .. மாதவன் தன் கல்லூரி படிப்பின் போதே ஒரு பெண்ணை காதலித்து , தன் வீட்டின் சம்மதத்துடன் ஊரறிய மனைவியாக்கிகொண்டவன் , 8 வயதில் சிறுவனுக்கு தந்தை என்னும் அந்தஸ்து கூட அவனுக்கு உள்ளது .. மூன்றாண்டு காலமாக அவன் மனைவியால் பெரும் சிறு சிறு சண்டைகளுக்கான மருந்தாய் அவனுக்கு பயன் பட்டவள் தான் சுஜா ... அவனின் சுய இன்பத்துக்காக பலிகாடானது அவளின் கண்மூடித்தனமான அன்பும் காதலும் .. ஒரு கதையை சொல்லி முடிக்கும்முன் அவளின் காதலை தொடருமலவுக்கு இன்னொரு கதையை உருவாக்கினான் , தன் மனைவியை பற்றி அவதூறாக பேசி அவளிடமிருந்து விவாகரத்து வாங்க போவாதாக கூறினான் , மேலும் அவளின் அனுதாபங்களை சம்பாதிக்கா தன் 8 வயது மகனை பற்றியும் பேசவும் , சுஜாவுக்கு அவன் மீதிருந்த கோவம் தணிந்து மீண்டும் அன்பை அர்ச்சிக்க ஆரம்பித்தாள் .. மீண்டும் காதலை வளர்த்தாள் , அவளால் கொடுத்த அன்பை குறைக்க மனமில்லை , அது வளர்ந்து கொண்டே தான் போனது .. அவனுக்கும் தான் மனைவியிடம் விவாகரத்து கிடைக்கும் தருணமும் வந்தது .. துன்பமும் ஒருவரை துரத்தினால் துரத்தி கொண்டே இருக்கும் , உண்மைக்கு எந்தக்காலமும் ஞாயம் கிடைக்காதுதுக்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டானது சுஜாவின் அன்பு , இக்கணம் அவளின் அன்பு பணத்தால் வெல்லப்பட்டது ... மாதவனுக்கும் சுஜாவுக்கும் திருமணம் எதிர்பார்ப்புகள் அவளின் மனதில் ஒரு பக்கம் குதூகலமாகக அவனோ வேறு ஒரு வாழ்க்கையை அவனுக்கு அமைக்க முடிவெடுத்து விட்டான் .. ஒரு விவாகரத்தானா பணக்கார பெண் அவனுக்கு வாழ்வு கொடுக்க சம்மதித்தால் , அவன் சுஜாவை மறுத்துவிட்டான் .. சுஜா வாழ்க்கையை வெறுத்து மீண்டும் அவள் குடும்பத்துடன் இணைந்தாள் .. அதோடு விடாதா மாதவன் , சுஜாவின் அன்புக்கு மீண்டும் ஆசை பட்டு அவளை தொலைபேசியில் அழைக்க ஆரம்பித்தான் ,.. அவளோ அவனை வெறுக்க ஆரம்பிக்க , சுஜாவின் உண்மையான அன்புக்கு கிடைத்தது அவனின் கொச்சையான வார்த்தைகளும் ஏமாற்றமும் மட்டுமே . . . அவனுக்கு கடந்த june 8 ஆம் தேதி அந்த பணக்கார பெண்ணை திருமணம் நடந்து முடிந்தது ..மறுமுனை சுஜாவோ உண்மையான அன்பை மதிக்காதா இவ்வுலகத்தில் எனக்கு மட்டும் இடம் எதற்கு என்று தன்னை மாய்த்துக்கொண்டாள் .. அவளின் மூச்சு நின்று போய் மூன்று வாரம் பொறுத்தே அவளின் துயரம் அனைத்தும் அறிந்த அவளின் மூச்சாய் இருந்த என் தோழிக்கு அறியவந்தது ..

இது ஒரு உண்மையான கதை மட்டுமல்ல , ஒரு எச்சரிக்கையும் கூட ... அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் .. அன்பு காட்டுங்கள் , அதுக்கு தகுதியானவங்கலானு பாத்துட்டு அப்பறம் அன்பு காட்டுங்கா .. இல்லனா காட்டுகின்ற அன்புக்கு எதையும் எதிர்பாக்காதீங்கா .. இணைய நட்பு என்பது ஒரு பெரிய வரம் தான் , ஆனால் அதை துஷ்ப்ரயோகம் பண்ணும் நாசகிருமிகள் இருக்கும்வரை அது ஒரு ஆபத்தான பகுதியே .. உண்மை எல்லாரிடத்திலும் இருப்பதில்லை , உண்மையென்று தெரிந்த பின்பே உங்கள் உண்மையான அன்பை காட்டுங்கள் .. காதல் ஒரு சுகமான அனுபவம் ,உணர்ச்சி, அதை உங்கள் சுய இன்பத்துக்காகவும் காம வெறிக்காகவும் அதை கவர்ச்சியாக்கி கொச்சை படுத்தாதீர்கள் .. இது ஒரு பெண்ணின் கதை , இது தெரிந்தது , ஆனால் இதே போல் நமக்குள் , நம்மை சுற்றி இருக்கும் நம் தோழிக்கோ , இல்லை நம் நண்பர்களின் தோழிக்கோ கூட நேரிடலாம் , சுயநலம் படைத்த இவ்வுலகல வாழ்வில் நாம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் தான் வாழ வேண்டும் .. இன்று ஒரு சுஜா நம்மை விட்டு பிரிந்து விட்டாள், ஆனால் இன்னும் எவ்வளவோ மாதவன்கள் நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ... பெண்கள் ஒன்றும் பொம்மையல்ல ,உங்கள் அடிமையுமல்ல அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு , அவர்களின் உணர்ச்சிகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் .. ஒரு மாதவனால் இழந்தது எத்தனை பேருடைய சந்தோஷம் - அவன் மனைவி ,மகன் ,புது பணக்கார மனைவி ,சுஜாவின் பெற்றோர்கள் , சுஜா ,அவளின் தோழி , என் தோழியின் மூலமாக நான் , என்னிடமிருந்து நீங்கள் ... மீண்டும் எச்சரிக்கிறேன்..

காதல் உண்மையானது , புனிதமானது , அதை காமத்துடன் ஒப்பிட்டு அதை கொச்சை படுத்தாதீர்கள் ..

உங்கள் காம பசியை தீர்க்க எவ்வளவோ வழியுண்டு காதலை பயன் படுத்தாதீர்கள் .. :'(

பெண்களே உங்களின் அன்புக்கு ஈடா இவ்வுலகத்தில் யாரும் அன்பு செலுத்த முடியாது, ஒரு ஆணின் மேல் அன்பும் காதலும் வைப்பதற்கு முன் ஆயிரம் முறை யோசியிங்கள் , எத்தனை காலம் வேணுனாலும் எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் பிறக்கும் பொது தனியாக பிறக்கவில்லை உங்களுக்காக உங்கள் பெற்றோர்கள் எப்பொழுதும் உங்கள் கூடவே உள்ளார்கள். ஒரு சில நயவஞ்சகர்களால் உங்களின் முடிவு உங்களை சார்ந்த அனைவரையும் பாதிக்கின்றது.

காதல் செய்யும் அனைவருக்கும் உங்கள் காதலில் எந்த பிரெச்சனை வந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள், பேசி தீராதது ஒன்றும்மில்லை, பிரிவு ஒரு முடிவுமில்லை. ஆண்னென்ன பென்னேன்னா ஒரு முறை அன்பு காட்டினால் அதை மாட்டரா முடியாது இதுவே உலகின் நியதி..

மீண்டும் ஒரு நல்லதோர் சந்தர்ப்பத்தில் சந்திக்கும் வரை ..

என்றும் ப்ரியமுடன்

அருண்.K.நட்ராஜ் :(

இக்கதையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


மகாலட்சுமி

என்றும் போல் அன்றும் உச்சி வெயில் கொதிக்க மதுரை நகரமே அனல் பறக்க, திருச்சியிலிருந்து வந்த பேருந்து ஒரு பெரிய குடும்பத்தை இரக்க நம் பயணத்தை துடங்குவோம். வயதானாலும் காதல் மாறாத ஒரு இளம் ஜோடி (இவர் தான் பெற்றோர் போலும்) , இளமை புதிக்கும் தம்பதியர்களின் (இது அக்காவா இருக்கும்) கையில் சுட்டி செய்யும் இரு குழந்தைகள் (அக்கா பசங்களா இருக்குமோ), மற்றும் எந்த கூட்டத்திலும் கண்டு பிடிக்கும் அளவுக்கு பளிச்சென்று வெள்ளை சட்டையும் இருளை அழிக்கும் விழிகளை இருளால் மறைத்திருக்கும் அழகான இளைஞன் (இவர் அவரே தான் – மாப்பிளை சார் ).. அக்குழந்தையின் தந்தை தன கையிலிருந்த கைபேசி எடுத்து எனக்கு அழைப்பு விடுத்தார்.. நாம் அங்கு சென்று அவர்களை வரவேர்த்து நாம் கொண்டிருந்த வண்டியில் மஹா வீட்டுக்கு சென்றோம்..

ஆம் , மஹா – என் மனைவியின் சகோதரி..நாங்கள் அவர்களின் பக்கத்து வீட்டில் குடியிருக்கிறோம்.. நான் இது வரை எத்தனையோ பெண்களை பார்த்ததுண்டு ஆனாலும் மஹா வை போல் ஒரு பெண்ணை கண்டெடுக்க எத்தனை ஜென்மம் தான் காத்திருப்பேனோ.. அவர்கள் குடும்பம் சாதாரணமான நடுத்தர குடும்பம் தான்.. அவளும் ரொம்ப சாதரணமா வளர்ந்த பொண்ணு..அன்பும் பண்பும் நிறைந்த குடும்பத்தின் வறுமையினால் அவளின் படிப்பை கூட எளிமையாக முடித்துக்கொண்டாள்(BA).. அவளுக்கு நண்பர்கள்னு கூட யாருமில்லா.. அன்பு காட்டா அவளை மிஞ்ச எவராலும் முடியாது.. அவளுக்கு எல்லாமே அவள் அம்மா,அப்பா, தங்கை, தம்பி.. இவர்களை தவிர வேறு உலகம் அவளுக்கு கிடையாது.. என்ன துயரம் வந்தாலும் அமைதியாக தைரியமாக பேசுவாள்.. அவளுக்குள்ளே இருக்கும் சுட்டி தனம் அவள் தங்கை தம்பியிடம் மட்டுமே வெளி வரும்.. அவள் பாடும் பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம்.. கண்மை இட்ட கண்கள் ஆயிரம் காந்தம் ஈர்க்கும் சக்தி கொண்டது… பெயரில் மட்டும் மகாலட்சுமி அல்லாமல் குனத்தாளையும், ஐஸ்வர்யத்தாளையும் மகாலக்ஷ்மியை போல் விளங்குகிறாள்… இது அனைத்தும் என் மனைவி என்னிடம் சொல்லி நான் தெரிந்து கொண்டது.. ஒரு பெண் இன்னொரு பெண்ணை பற்றி எளிதாக பாராட்ட மாட்டார்கள், அனால் அப்பெருமைக்கு எந்த விதத்திலும் குறையவில்லை மஹா..

இறைவன் நல்லவர்களை மட்டும் தான் அதிகமாய் சோதிப்பான் அவர்களுக்கு சிறந்த பரிசை கொடுப்பதற்கு .. அவ்வழியில் மஹா இறைவனின் செல்ல பிள்ளை.. நானும் மாதம் இரண்டு மூன்று மாப்பிளை வீட்டாரை அழைத்து வந்திருக்கிறேன், அவளை பிடித்து போகும் அவர்களுக்கு அவளின் ஏழ்மையை பிடிப்பதில்லை.. வந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லிவிட்டு விளைகின்றார்கள்.. எத்தனை தடை வந்தாலும் ஆண்டவன் போடும் முடித்ததை யாராலும் மாற்ற முடியாது.. இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று , என்ற கவிதை இவள் வாழ்க்கையில் இன்று முடிவாகவேண்டும் என்றும் ஆண்டவனை பிரார்த்தித்து அவர்களை அழைக்க சென்றேன்.. நான் மனம் முடித்ததிலிருந்து இன்று வரை என் மனைவியின் விழிகளை நீர் பார்த்ததில்லை, அதற்காக எங்க வீட்டில் வெங்காயம் கூட நான் தான் வெட்டுவேன்..அனால் சென்ற வாரம் அவள் என் மடி சாய்ந்து ஏங்கி அழுதாள், மஹா வை பார்த்து பரிதாபத்தோடு… அன்று காலை மகாவை ஒரு பெண் பார்க்க ஒரு குடும்பம் வந்துவிட்டு வரலக்ஷ்மியின் வருகைக்கே வரதட்சனை கேட்டு அது கொடுக்க முடியாமல் வரதலட்சுமி என்று சென்று விட்டார்கள்.. அன்று மஹா என் மனைவியிடம் என்றும் போல் இல்லாமல் சோர்ந்து போய் மனம் விட்டு அழுதிருக்கால்.. வாழ்வின் முடிவுக்கு கூட சென்று விடலாம் என்று அவளை னியாநிக்கா தூண்டிருக்கிறது அக்கசப்பான நிகழ்வுகள்..

அனைத்தையும் நினைத்து முடிப்பதற்குள் வீடு வந்தடைந்தோம்.. மகாவின் அன்னையும் தந்தையும் அவர்களை வரவேற்று வீட்டினுள் சென்றார்கள்.. அனைவருக்கும் உட்கார தரையில் பாய் விருத்தி வைக்க பட்டது.. அவர்கள் வாங்கி வந்த பூ பழங்களை ஒரு தாம்புலத்தில் வைத்து அமர்ந்தார்கள்.. நாமும் அவர்களின் அருகில் அமர்தோம்.. அவர்களின் இரு குடும்பத்தார் பற்றி பரஸ்பரமாக பேச துடங்கினார்.. சிறு நேரம் பொறுத்து மகாவின் தந்தை மகாவை அழைத்து வர சொல்லி அவளின் தங்கையிடம் கூறினார்.. சற்றும் நேரம் தாமதிக்காமல் மாப்பிள்ளை வேண்டாம் என்று கூற எல்லோரும் அமைதியானார்கள்.. சற்றே சிரித்த படி இபோ வேண்டாம், நீங்க எல்லாம் பேசி முடிங்க, எல்லார்க்கும் எல்லாமே ஒத்துபோசின அப்பறம் அவர்களை பார்கிறேன் என்று கூறினார்.. மகாவின் வீட்டில் எல்லோரும் ஒரு நிமிடம் திகைத்து போனார்கள், நான் உட்பட.. “சரி” என்று மாப்பிளையின் தாய் ஆரம்பித்து தொடர்ந்து-“ என்ன செய்வீங்க உங்க பொண்ணுக்கு” என்று கேட்க, மறுபடியும் மாப்பிளை குறுக்கே தலையீட்டு, “ நீங்க என்னமா செய்ய போறீங்க அவங்க பொண்ணுக்கு, எல்லாமே விசாரிச்சிட்டு தானே வந்தோம், இப்படி ஒரு குணவதி உனக்கு மகளாய் கிடைக்க நீ தான் அவங்களுக்கு செய்யணும்” என்று சொல்ல, அவர் தாய் புன்னகைத்தார்.. “ அவன் இப்படி தாங்க அவன் மனைவியின் வீட்டில் இருந்து ஏதும் எதிர் பாக்க கூடாது சொல்லிடு இருப்பன், ஏதோ விளையாட்டுக்கு சொல்றான்னு நினைச்சேன்,ஆனா இப்போ பெருமையா இருக்கு.. “ நாம் குறிக்கிட்டு அப்பறம் ஏன்னா இப்போவாது பொண்ண பார்க்கலாமா என்று மாப்பிளையிடம் கேட்க, ஆண்களுக்கே உண்டான வெளிகாட்டதா நாணத்துடன் சிரித்தார்..என் மனைவியிடம் சொல்லி அழைத்து வர சொன்னேன்.. எல்லோரையும் வணங்கி அருகில் அமர்ந்தால், மாபில்லையிடம் பேச விரும்புறீங்கள என்று கேட்க, அவர் தலை அசைத்தார்.. இருவரும் சிறு நேரம் மனம்விட்டு பேசி வந்தார்கள் .. இவர்களுக்கும் ரொம்ப பிடித்து போகா, இரு வீட்டாரும் அன்றே ஒரு நல்ல தேதியை குறித்து விட்டு, வரும் கார்த்திகை மாதத்தில் திருமணம் முடிவாக்கிவிட்டு சென்றார்கள்..

இத்தனை தடைகள் ஏநேனா எனக்கு அன்று தான் புரிந்தது.. ஆண்டவன் நமக்கு ஒரு தடை விதிக்கிறான் என்றால் அதற்க்கு ஒரு காரணம் இருக்கும், அவன் நமக்கு எது தரவேண்டுமோ அதை கண்டிப்பாக தருவான் என்று புரிந்து கொண்டேன்.. இதுவரை மகாவிடம் கண்டிடாதா பூரிப்பையும் கண்டேன், அதில் இறைவனின் அன்பைக்கண்டேன்.. எனக்கு தெரிந்த ஒரு மகாவின் வாழ்கை இறைவன் அருளால் நன்றாக முடிவானது, இறைவன் போட்ட முடித்ததை போட மாப்பிளை கிடைத்து விட்டார்..அனால் மகாவை போல் பல பெண்களுக்கு இத்துன்பம் தோன்றும்..திருமணம் வயதானால் எல்லா பெண்களுக்கும் திருமண ஆசை வருவது இயற்கை அதற்கு மாறாக நாம் ஏதும் செய்ய இயலாது.. பெண் என்ன பொருள் காட்சியா வாரம் ஒருவர் வந்து பார்த்துவிட்டு போவதற்கு, இந்த நிலமுறை என்று தான் மாறும்.. பெண்களுக்கும் ஒரு உணர்வு உண்டு அதை ஏன் மதிக்க மறுக்கிறார்கள்.. பெண் பார்ப்பது தப்பில்லை, ஆனால் பார்க்க வரும் முன் அவர்களின் புகைப்படம் பார்த்து, ஜாதகம் பார்த்து, வசதி வாய்பை பார்த்து விருப்பம் இருந்தா வீட்டின் பெரியவர்கள் பார்த்து பெசியப்பின் பெண்ணும் பையனையும் பார்த்துக்கொள்ளலாமே.. அதை விட்டு விட்டு ஒரு பெண் அவனை பிடித்துக்கொண்டு மனக்கோட்டை கேட்டிவிட்டு, ஒரு சில காரணத்தால் அதை உடைப்பது செரியா.. இன்னும் எத்தனை நாள் தான் ஆண்கள் பெண்களிடம் விலை போக போகிறார்களோ.. ஆண்களே நீ வரதட்சனை வாங்கும் ஒவ்வொரு பைசாவும் உனக்கு நீ பேசும் விலை.. உன்னை நீ விற்பதற்காக நீ பேசும் விலை தான் வரதட்சனை.. உன்னை அன்பாகவும், உன் குழந்தையும் குடும்பத்தை சுமக்க போகும் உன் இரண்டாவது தாயை மனம் முடிக்கா நீ அல்லவா அவளுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும்.. எத்தனை சட்டம் வந்தாலும் நீங்கள் வாங்கப்போவதை யாரும் தடுக்க மாட்டார்கள்.. உன்னை நீயே தாழ்த்தி கொண்டு வாழ வக்கேடுத்தவன் என்று உனக்கு தோன்றினால் நீ எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிகொள், அனால் நீ இந்த போஒமியிளிருந்து செல்லும் பொது அந்த வரதட்சனி உனக்காக கண்ணீர் விடாது, அதனுடன் நீ அழைத்து வந்த மனைவி தான் கண்ணீர் விடுவாள், உனக்காக அவள் வாழ்கையே தியாகம் செய்யும் பொது நீ அவளுக்காக இதை தியாகம் செய்ய உனக்கு ஏன் தயக்கம்.. மாற்றம் ஒன்றே மாற்றாதது நாம் மாறலாம்..

மீண்டும் ஓர் நற்சந்தற்பத்தில் சந்திக்கும் வரை என்றும் ப்ரியமுடன்

அருண்.K.நட்ராஜ்

Sunday, April 17, 2011

என் கிறுக்கள்கல்

****
காற்றைப்போல் நீ வந்ததும் தெரியவில்லை போனதும் புரியவில்லை
எதற்காக நீ வந்தாயோ அதை நினைத்து இனி எனக்கு தூக்கமும் இல்லை...

****
மன்னிக்காதே !! நான் உன்னை நேசித்ததிற்கு ...
மறவாதே !! நீ என்னை நேசித்ததற்கு...

****
உன் மௌனம் என்னை பேசவைத்தது
உன் புன்னகை என்னை மலரவைத்தது
உன் அன்பு என்னை நேசிக்கவைத்தது
உன் காதல் என்னை மறக்கவைத்து....

****
தோழியே...
என் கண் பார்க்க ஒரு தோழி வந்தால், நான் பார்ப்பதற்குள் மறைந்துவிட்டால்.
என் தோழ் சாய ஒரு தோழி வந்தால் ,நான் சாய்வதர்க்குல் மறைந்துவிட்டால்.
என் மௌனத்தை உடைக்க ஒரு தோழி வந்தால்,நான் பேசுவதற்குள் மறைந்துவிட்டால்.
என் குறை தீர்க்க ஒரு தோழி வந்தால்,நான் தீர்க்கும்முன் மறைந்துவிட்டால்.
என் இதயத்தை பரிமாற ஒரு தோழி வந்தால், நான் தரும்முன் மறைந்துவிட்டால்.
என்னை ரசிக்க ஒரு தோழி வந்தால் , நான் ரசிப்பதற்குள் மறைந்துவிட்டால்.
என்னை புன்னகைக்க ஒரு தோழி வந்தால், நான் சிரிக்கும்முன் மறைந்துவிட்டால்.
நீ எங்கும் மறைந்து விடவில்லை என்னுள் குடி புகுர்ந்து விட்டாய்யடி தோழியே...
என்றும் என்னுள் நீ,உன்னால் நான்....

****
மேகமூட்டம் போல் உன் நினைவுகள் ,
அதனால் எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் ...
என் கண்களில்....
என்றும் உன் நினைவுகளுடன் ...!!!!!

****
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்திரம் இல்லை....

****
பூத்து குலுங்கும் மலர்களை போல்தான் என் அன்பும் ,
பறிக்க பறிக்க பூத்துக்கொண்டேதான் இருக்கும்...

****
என் அன்பு காற்றைப்போல் உணர மட்டும் தான் முடியும்
ஆனால் யார் வேண்டுமானாலும் சுவசித்துக்கொள்ளலாம்

****
நான் எழுதிய முதல் கவிதை
என் அவளுக்கு இன்னும் பொய் சேரவில்லை

****
என்னவளுக்கு தெரியாது
என் முதல் கவிதை அவள் பெயர்தான் என்று...

****
எழுத்தாளர்கள் மாறலாம், எழுத்துக்கள் ஒன்றுதான் - காதல்....

****
உன்னை சந்தித்த முதல் நொடியே என் சிந்தனைகளை நான் மறந்துவிட்டேன்..

****
என்னவளே .. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் நினைவில் நீ தானடி ..இந்த ஜென்மமும் காத்திருக்கிறேன்.. உனக்காக..

****
என்னவள் பிறந்த பின் தான் அம்மாவாசை பிறந்ததோ என்று ஒரு சந்தேகம்..
அவளை பார்த்து வெட்கப்பட்டதோ அந்த நிலா..

****

எனவளுக்காக...
*உன்னை நான் கண்டபிறகே நான் கவிஞன் ஆனேன்...
*என்னவளுக்கான பொக்கிஷம் - என் காதல்

****

என் காதல் என்னை கவிதை எழுத தூண்டியது..
என் நட்பு என்னை கதை எழுத தூண்டியது..

*****

அன்பு காட்டும் நெஞ்சங்கள் எல்லாம் உன்னை காதலிப்பதாக அர்த்தம் இல்லை...

****
காதல் மோகத்தை வெள்ள முடிந்த எனக்கு நட்பின் அன்பை வெல்ல முடியவில்லை..

****

உன்னை நான் சந்திக்கும் முன் உன் தோழியை சந்தித்திருந்தால்..அவளையே காதலித்திருப்பேன்..

****

காதல் சுகமானதுதான் , அது காதலர்களை பொறுத்துதான்.
தோழனிடம் காதலால் தவிக்கும் தோழி சொன்ன வாக்கியம்..

****

இந்த உலகமே பார்த்து பொறாமை படும் என் காதலை நீ மட்டும் ஏன் வெறுக்கிறாய் ..

****

இத்தனை அழகாக உலகை படைத்த கடவுள் ஏன் எனக்கு பார்வை கொடுக்க மறந்துவிட்டார்.
- ஒரு பார்வையற்றவரின் ஏக்கம்..

*****

என் காதல் பரிசு என்னவளுக்காக- என் விழிகள்..
நான் இருந்தபின்னும் அவளை பார்த்த அந்த விழிகள் இவ்வுலகை என்றும் ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும்..

*****

காதலுக்கு சான்றிதழ் தேவையா என்றேன்...
இல்லை என் இதழே போதும் என்று என்னை மௌனம் ஆக்கினாய்

******

என் விழிகளுக்கு பொய் பேச தெரியாது.. அதனால் தான் என்னவோ உன்னை கண்டு முதல் நொடியே என்னிடம் சொன்னது நீ தான் என்னவள் என்று...