காலை ஒரு 7 மணி இருக்கும், சூரியன் கூட இன்னும் முழுமையாக விழிக்கவில்லை, அதற்குள் அவள் கல்லூரிக்கு செல்ல நேரமாயற்று. சென்னை, புறநகரான அம்பத்தூரில் வசிக்கும் அவள் mountroad இல் உள்ள எத்திராஜ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு b.sc – physics படிக்கிறாள். தினமும் காலை 7 மணிக்குள் பேருந்தை பிடித்தால்தான், சென்னை மக்களின் பேருந்து கூட்ட நெருசல்களில் இருந்து தப்பித்து நிம்மதியாக கல்லூரியை அடைய முடியும். அந்த இளம் வெயிலில், யாரும் தென்படாதா அந்த தெருவில் அவள் நடந்து வந்துகொண்டிருக்கும் சமயம், எதிரே இரண்டு சின்ன பிள்ளைகள்,பள்ளிக்கு சென்று கொண்டிருக்க, இவளுக்கு என்ன தோன்றியதோ, அந்த பிள்ளைகளின் அருகே இருந்த மரத்தின் கிளையை ஆட்டி, அதில் இருந்த பனித்துளிகள் அவர்கள் மூவரின் மேலும் பட, குஷியுடன் அந்த பிள்ளைகளின் தலையை செல்லமாக கோரி விட்டு பேருந்து நிலையத்துக்கு விரைந்தாள். நிம்மதியாக ஒரு பெருமூச்சி விட்டாள், அவள் செல்ல வேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை. பேருந்துக்கு காத்திருக்கும் தருணத்தில்தான் அவளிடம் இதுவரை கண்டிராத ஒரு பதற்றம் தோன்றியது – ஆம் எல்லா மாணவர்களுக்கும் தோன்றும் அதே துயரம் தான் அவளுக்கும்.
அன்று அவள் கல்லூரியில் ஏதோ பரீட்சை போலிருக்கு. அவள் பதற்றத்திற்கு ஏற்றார்போல் பேருந்தும் விரைந்து வந்து நின்றது. எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை, திடீரென்று அப்பேருந்தில் நுழைவாயில் அவ்வளவு கூட்டம்,நெரிசல். அவள் தவிப்பு தெரிந்தது, ஒரு seat கிடைக்காத என்ற ஏக்கம் அவள் கண்ணில் தோன்றியது. ஆனால் அவள் தவிப்புக்கு எப்போதும் போல் அதே ஏமாற்றம்தான் மிஞ்சியது.
ஒரு சில நிமிடங்களில் பேருந்து நிரம்பி வெளியே வழிந்ததும் கண்டக்டர் whistle அடித்து கிளப்பினார்.. நிரம்பிய பேருந்தில், சிக்கித்தவிக்கும் அவளுக்கு ஒரு ஓரமாக நிற்க கொஞ்சம் இடம் கிடைத்தது. கம்பியை பிடித்து நின்று கொண்டிருந்த அவள், நான்கு பக்கத்திலுமிருந்தும் இடிக்க பட்டு நசுங்கிய நிலையில், அவள் நின்று கொண்டிருந்த
இடத்தின் முன் சீட் காலி ஆகவே, அவள் படாரென்று நுழைந்து அவ்விடத்தை பிடித்து அமர்ந்தாள் . அதுவரை கண்டிறாத அமைதியும்,சந்தோஷமும் அவளிடன் அப்போது தோன்றியது.
அவள் கை குட்டையால் அவள் முகத்தில் படிந்த வியர்வையை துடைத்து பையில் இருந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால். அவள் இரண்டு பக்கம் திருப்புவதற்குள் கண்டக்டர் வந்து டிக்கெட் என்று கூற, அவள் பர்சில் இருந்த இருபது ரூபாய் நோட்டை நீட்டி எதிராஜ் என்று சொன்னதும், அவளிடம் டிக்கெட்டையும் பாக்கி சில்லறையையும் கொடுத்துவிட்டு கிளம்பினார் கண்டக்டர். ஒரு மணி நேர கூட்ட நெரிசலின் பயணத்திலிருந்து விடை பெரும் நேரம் வந்தது, மவுண்ட் ரோடு எட்டியதும் அவள் இருக்கையில் இருந்து எழுந்து நுழைவு வாயிலின் அருகில் சென்றாள். அவளின் நிறுத்தம் வந்ததும் இறங்கினாள்.
மவுண்ட் ரோடு பற்றி சொல்லவே வேண்டாம், எந்நேரமும் பிஸியாகவே இருக்கும், அன்று காலையும் வழக்கம் போல் கார், பஸ், இருசக்கர வாகனங்கள் வேகமாக இருபக்கமும் சென்று கொண்டிருந்தது. இவளோ சாலையை கடப்பதற்காக காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், படாரென்று ஒரு சத்தம். கண்மூடி திறக்கும் நொடியில் ஒரு வண்டியில் சென்றுகொண்டிருந்த இளைஞன் சாலையில் வலது
பக்கம் திரும்பும் தருணத்தில் வேகமாக வந்த கார் அவன் வண்டியில் உரசி, அங்கையே விழுந்து கிடந்தான். மக்கள் கூட்டம் அவனை சுற்றியது, அதில் ஒரு குரல் எழும்பியது, “ஆளு ஸ்பாட் காலி, யாரும் பக்கத்துல போகாதீங்க, போலீஸ்க்கு போன் பண்ணலாம் ”. சாலையில் அவன் ரத்தம் சிந்தி
எங்கும் சிவப்பு நிறமாக தோன்றியது, பக்கத்தில் போகவே பயமாக இருந்த அந்த இடத்தில் அவளும் இருந்தாள். பென்சில் சீவும்போது விரலில் கத்தி பட்டு வரும் சிறிய ரத்தத்தை பார்த்து பயப்படும் அவளுக்கு எங்கிருந்து வந்ததோ அந்த தைரியம் என்று தெரியவில்லை, எல்லோரையும் போல் வேடிக்கை பார்த்து கொண்டு இல்லாமல், அவன் பக்கம் நெருங்கினால். அவனுக்கு தலையில் பின் மண்டையில் தான் ஆழமான காயம், தண்ணீர் குழாயில் பாயும் தண்ணீர் போல் மண்டையின் பின் புறத்திலிருந்து ரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது.
அவள் அவனது தலையை தூக்கி பிடிக்க, அவனின் மூச்சி எழுந்தது, அவன் உயிருடன் தான் இருக்கிறான் என்று அவளுக்கு தோன்றியதும், அவளின் மென்மையான குரல் கூட கத்த தொடங்கின –‘இன்னும் உயிர் இருக்கு காப்பாத்தலாம், சீக்கிரம் வாங்க’. நம் மக்களோ மெல்ல தயங்கி அவனை நெருங்க, ஏதோ ஒருவன் "தலையில் ரத்தம்
கொட்டுவதால் அதை உடனே நிறுத்த வேண்டும்" என்று கூற. யாரிடமும் அதை கட்டும் அளவுக்கு துணி இல்லை. அவளோ அவள் கூச்சத்தை கூட பொருட்படுத்தாமல், அவளின் தோலில் இருந்த துப்பட்டாவை எடுத்து அவன் தலையில் கட்டினாள். வெகுவாக ஒரு வண்டியை அழைத்து அவனை தூக்கி சென்றார்கள்.
அவன் செல்லும்முன் அவளுக்கு கிடைத்த ஒரு ஆறுதல் அவனை தூக்கும் பொது அவனின் புன்னகை. ஆயிரம் அர்த்தங்கள் அடங்கும் புன்னைகை, அவனுக்கு அவள் கடவுளாக...அவனை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் ஒரு புன்னகைக்கு ஈடு இணை எதுவும் இவ்வுலகில் உண்டோ?? அவனை காப்பாற்றிவிட்டோம் என்ற எண்ணத்தோடு அவள் கல்லூரிக்கு சென்று பரிட்சையை எழுத சென்றாள். அன்று முழுவதும், அவள் துப்பட்டா இல்லாமல்தான் கல்லூரியில் இருந்தால். அவள் கல்லூரியில் இருந்தாலும் அவளுக்கு மீண்டும் மீண்டும் தோன்றியது அந்த புன்னகை மட்டும்தான். அவளிடம் கண்டக்டர் கொடுத்த சில்லறையை தவிர வேறு எந்த பணமும் இல்லை, அவளின் தோழிகளிடம் 50 ருபாய் வாங்கி கல்லூரியில் இருந்து கிளம்பினால். வீட்டிற்க்கு அல்ல, அந்த சுற்றுபுறம் உள்ள எல்லா மருத்துவமனைக்கும் சென்று அந்த இளைஞ்னைப் பற்றி விசாரித்தாள். மதியம் 1 மணியிளவில் ஆரம்பித்த அவளின் தேடல் இரவு 7 மணி வரை தொடர்ந்தும் அவளால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் எல்லோரும் பதற்றமாய் அவளை தேடி பேருந்து நிலையத்தில் காத்திருக்க, அவளோ அவனைக் காணமுடியாத ஏமாற்றத்துடன் இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு வந்தடைந்தாள்.
அவள் வீட்டிலோ அவளுக்கு மிஞ்சியது திட்டு மட்டும் தான். அவர்களின் ஒரு வாதம், உனக்கேன் இந்த வேண்டாத வேலை. அவளுக்கோ அவர்களின் திட்டு எதுவும் செவியில் ஒலிக்கவில்லை, அவனின் நினைப்புடன் அவளுடைய அறைக்கு சென்று கதவைச் சாற்றினாள். அவளுக்கு ஆதரவாகவோ அவளின் தைரியத்தை பாராட்டவோ அவள் நட்பை சேகரிக்கவில்லை. அன்று இரவு முழுவதும் அந்த இளைஞனின் நினைவோடு, அவனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்துக்கொண்டே இருந்தாள். இன்றும் அவள் மனதில் அவன் எங்கோ நன்றாக வாழ்கிறான் என்ற மன திருப்தியுடன் வாழ்கிறாள். அவனின் புன்னகை இன்னும் அவள் மனதில் ஆழமாக பதிந்திருக்க, அவளின் தேடல் ஒரு நாள் பூர்த்தியாகும்.
இப்படி நம் நாட்டில் எத்தனையோ பெண்கள் அவர்களின் தைரியத்தை ஒரு கட்டு கோப்புக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த பெண்ணிடம் இருந்த மனிதாபிமானமும் தைரியமும் அந்த கூட்டத்தில் இல்லாத ஆண் இனமே, பெண்ணின் உரிமையையும், அவளின் சுதந்திரத்தையும் பறிக்க நீ யாரடா????.. சமுதாய அக்கறை காட்டுவோம், ஒன்று கூடுவோம்,சம உரிமை காண்போம். நாம் ஒரே இனம், மனித இனம். எல்லோரையும் வாழ வைப்போம். நாமும் வாழ்வோம்.
இது கதையல்ல நிஜம். இந்த வீரச்செயலை செய்த என் தோழிக்கு கணம் கோர்த்து வணங்குகிறேன் வாழ்த்துகிறேன். இக்கதை அவளுக்கும் அவளைபோல் வீரம் கொண்ட அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம்.
20 comments:
Whoever is that great personality i honor her and salute her
Girls don't expose every time, they explode at the requirement
Yes anna....The tittle is absolutely correct..."Poovukkul Eram"... But intha matheri yetho onu rendu poo thaana anna nama oorla irukku...
Intha "POO" yenkidra vaarthai..."POOKKAL" yendra thottam aaga vendum...
Athuthaan yen aasai... Ithula innoru important matter.... Nenga last ah onnu solerukkenga....
"இது கதையல்ல நிஜம். இந்த வீரச்செயலை செய்த என் தோழிக்கு கணம் கோர்த்து வணங்குகிறேன் வாழ்த்துகிறேன். இக்கதை அவளுக்கும் அவளைபோல் வீரம் கொண்ட அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம்."
Nanum ungaludan enaikeren...
"வாழ்த்த வயது இல்லை....
வணங்குகிறேன்..."
நன்றி!... வணக்கம்!!
- உங்கள் அஸ்வின்...
good.
I have no idea, what you had written, next time send in English buddy... All the very best. When I can expect your story in KUNGAMAM
Hats Off!! to the Womanhood...
The story is very good except for few spelling mistakes. Please quote the dialogues in order to highlight them which u have done for some . you have a good essence of narration which most of them lack in their story . I think u would become a writer in the future . All the very best 4 ur bright future and pls send these kind of inspirational stories to my ID . Take care.
THANK YOU
Now the story is corrected with spelling mistakes...
நன்றி... spelling mistake was an expected thing.. coz of two reasons...
1.technical mistake wen translation... it happens..
2.i dont knw 2 write tamil, so i cant correct the mistakes
My special thanks to Chandra selvan... whos has taken extra effort to correct all the mistakes n highlighted to me back...
And I would really thank two more people who have made me inspired for writing the story..
1. Sudha-my friend, who wud encourage my narration wen i used to msg her any incident..
2. karthick - my friend, who inspired me to start writing... infact i got d thought of writing only after reading his story... the future director you would all see him soon on big screen...
thank you sir... now corrected...
thanks a lot da :)
dae...thanks da...
thanks sir...
semma start arun ... chance illa , really inspirational :) dialogues ku quote kudutha innum nalla irukum :) narration was good ... and thanks for ur comment abt me :P:P:P
Hey cool pa. U hav done a good job by takin her out wat happened. Really superb. Congrats. I think im a gud frd of u nw and future fan of gud writer.
Thanks divi.. :)
thanks da... d credit goes to u tooo. :)
Thought to pen my comments first!!! though late!!! my wishes are always there for your each walk you step in!!!!
this was a kinda energy booster!!!! when i read this first long back!!!that tym i was n bad mood!!! once after reading this real story i got some refreshness in ma mind!!!!
great way you have presented!!!! good that you created blog and posted!!!!
Keep exploring da!!!
feel happy for you nanbha!!!!
Cheers & support,
Ambi
tanx da... :) hope u translate next tym without any spelling mistakes.. :P
நல்ல கருத்து...
Post a Comment